231
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் புதிதாக தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கள் போராட்டத்திற்கும், கவலைகள்,கண்ணீருக்கு காலம் தாழ்த்தாது நீதியை பெற்றுத்தர வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் இன்று சனிக்கிழமை(25) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் செயலாளர் பி.சர்மிலா மடுத்தீன் தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய நாங்கள் இவ் தேர்தல் காலப்பகுதியில் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியையும், உண்மைத்தன்மையையும் வெளிக்கொண்டு வரும் வகையில் தேர்தல் பிரச்சாரங்களை முன் வைத்து வாக்குறுதிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
குறித்த செயற்பாடுகள் அரசிற்கு ஓர் அழுத்தத்தை கொடுப்பதாக இருந்தாலும்,இவ் பிரச்சார இவ் பிரச்சார வாக்குறுதிகள் வெறுமனே தேர்தலில் வாக்குகளை சுவிகரிப்பதற்காக மட்டும் அல்லாது எமது உறவுகளின் ஏக்கங்களையும்,காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளையும், கணவனையும் பறிகொடுத்து நிற்கும் எங்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான வாக்குறுதிகளாக அமைய வேண்டும்.
தேர்தலின் பின்பு மக்களால் தெரிவு செய்யப்பட்டு ஆட்சிக்கு வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்களுக்கான நிறந்தரமான ஒரு தீர்வை பெற்றுத்தர வேண்டும். அரசிற்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.
நீதியுடன் செயற்பட வேண்டும்.அத்துடன் இவர்கள் சர்வதேசத்தின் ஊடாகவோ அல்லது உள்ளூர் பொறிமுறைகளுடாகவோ பாதிக்கப்பட்ட எமக்கு சார்பாக நின்று நீதிக்கான நிறந்தர தீர்வை பெற்றுத்தர வேண்டும்.
வெறுமனே இவ் வாக்குறுதிகள் காற்றில் பறக்காமல் எங்களுக்கு ஓர் நியாயமான தீர்வை பெற்றுத் தருவீர்கள் என நம்புகின்றோம். ஆகவே எங்கள் போராட்டத்திற்கும், கவலைகள்,கண்ணீருக்கு காலம் தாழ்த்தாது நீதியை பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்தனர்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் தலைவி ஏ.ரஞ்சினி,செயலாளர் பி.சர்மிலா மடுத்தீன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. #காணாமல்ஆக்கப்பட்டோர் #பாராளுமன்றஉறுப்பினர்கள் #நீதி #தேர்தல் #,வாக்குறுதி
Spread the love