Home உலகம்கொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டது – முதல் நாடாக ரஸ்யா அறிவிப்பு

கொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டது – முதல் நாடாக ரஸ்யா அறிவிப்பு

by admin

கொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டதாக முதல் நாடாக ரஸ்யா அறிவித்துள்ளது.   உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது உலகத்தின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ள நிலையில்   பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன.

இந்த நிலையில், ரஸ்யாவில் கமலேயா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின் சோதனைகள் நிறைவு அடைந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சா்  மிக்கேல் முராஷ்கோ அறிவித்துள்ளாா். கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு அடைந்து விட்டன எனவும் அடுத்து பதிவு செய்வதற்கான ஆவண வேலைகள்  இடம்பெற்று வருவதாகவும் அவா் தெரிவித்துள்ளார்.

மேலும்  கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை படிப்படியாக தொடங்க வேண்டும் என்பதால் தடுப்பூசியை அஎதிா்வரும் ஒடோபரில் போட திட்டமிட்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இதேவேளை  ரஸ்யாவில் நேற்று முன்தினம் காலை நிலவரப்படி புதிதாக 5,482 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில்  அங்கு தொற்று பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 8 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளதுடன்  பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  #கொரோனா #தடுப்பூசி #ரஸ்யா  #பரிசோதனை #கமலேயா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More