Home இலங்கையாழ் தேர்தல் முடிவுகள் நண்பகல் 12 மணிக்கு முதல் அறிவிக்கப்படும் ?

யாழ் தேர்தல் முடிவுகள் நண்பகல் 12 மணிக்கு முதல் அறிவிக்கப்படும் ?

by admin

யாழ்ப்பாண தேர்தல் முடிவுகள் 6ஆம் திகதி மதியத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்டு விடும் என யாழ்.தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.  யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளன. நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்படும்.
இம்முறை யாழ் மாவட்டத்தில் 508 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு ஏதுவாக, அதற்கு உரிய ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளன.
சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ளவர்களுக்கு வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அவர்களுக்கான அறிவுறுத்தல்களை சுகாதார பரிசோதகர்கள் வழங்குவார்கள். அவற்றை பின் பற்றி அவர்கள் வாக்களிக்க முடியும்.
வாக்களிப்பு தினமான புதன்கிழமை காலை 07 மணி முதல் மாலை 05 மணி வரையில் வாக்களிக்க முடியும். எனவே வாக்காளர்கள் தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு நேரத்திற்கு சென்ற வாக்களிக்கவும். சுகாதார நடைமுறைளை கடைப்பிடித்து அங்குள்ள உத்தியோகஸ்தர்களின் அறிவுறுத்தல்களை பின் பற்றி வாக்குகளை அளிக்க முடியும்.
வாக்களிப்பு அன்றைய தினம் முடிவடைந்த பின்னர் வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்கு பெட்டிகள் வாக்கெண்ணும் மத்திய நிலையத்திற்கு பாதுகாப்பான முறையில் எடுத்து வரப்படும். வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கு பெட்டிகள் பொறுப்பேற்கப்பட்டு , அன்றைய தினம் இரவு பாதுகாக்கப்பட்டு மறுநாள் 06ஆம் திகதி வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.
யாழ்.மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் 89 வாக்கெண்ணும் நிலையங்கள் உள்ளன. அவற்றில் 16 தபால் மூல வாக்கெண்ணும் நிலையங்களும் , 73 மற்றைய வாக்கெண்ணும் நிலையமும் அமைக்கப்பட்டு உள்ளன.   வாக்கெண்ணும் பணிகள் காலை 07 மணிக்கு ஆரம்பமாகும்.
முன்னதாக தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அவற்றின் முடிவுகள் 08 மணிக்கு முதல் அறிவிக்க முடியும் என எதிர்பார்க்கிறோம். அதன் பின்னர் ஏனைய வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு முதல் வாக்கெண்ணும் பணிகள் முடிவடையும் என எதிர் பார்க்கிறோம்.  என தெரிவித்தார். #யாழ்  #தேர்தல்முடிவுகள் #மகேசன் #வாக்களிப்புநிலையங்கள்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More