228
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் இன்று இடம்பெற்ற பயங்கர வெடிவிபத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 ஆயிரத்து 750-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பழைய வெடிபொருட்களால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் . அந்த வெடிபொருள் சோடியம் நைட்ரேட் எனவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது
வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளில் செம்மஞ்சல் நிறத்தில் புகைமண்டலமாக துறைமுகப்பகுதி மாறியது எனவும் அது நைட்ரஜன் டை ஒக்சைட் நச்சு வாயுவாக இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வெடிவிபத்து பெய்ரூட்டில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள சைப்ரஸ் தீவுகளில் உணரப்பட்டுள்ளதா தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து கருத்து தொிவித்த லெபனான் பிரதமர் ஹசன் டிஅப், நட்பு நாடுகள் தங்களுக்கு உதவ வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளதையடுத்து அமெரிக்கா, பிரான்ஸ், பிாித்தானியா போன்ற நாடுகள் லெபனானுக்கு உதவ முன்வந்துள்ளன.
இதேவேளை போரால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள லெபனானில் நடைபெற்ற வெடிவிபத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. #லெபனான் #பெய்ரூட் #வெடிவிபத்து #துறைமுகம்
Spread the love