உலகம் பிரதான செய்திகள்

பெய்ரூட் வெடிப்புசம்பவம் – பிரதமர் உட்பட ஆட்சியாளா்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனா். 

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த  செவ்வாய்க்கிழமை துறைமுக ரசாயன கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தனையடுத்து  மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், அந்த நாட்டின் பிரதமர் ஹஸ்ஸன் டியாப் தலைமையிலான  ஆட்சியாளா்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனா்.

இது தொடர்பாக பிரதமர் ஹஸ்ஸன் டியாப் தலைமையில்   நேற்று மாலை  நடை பெற்ற அமைச்சரவை கூட்டத்தில்   பெய்ரூட் வெடிப்பு சம்பவத்துக்குப் பின்னா் நாடு தழுவிய அளவில் நடக்கும் போராட்டங்கள் குறித்தும், 200 பேருக்கும் அதிகமானோர் பலியான சம்பவத்தில் மக்களின் எதிர்ப்புணர்வுக்கு பதில் அளிப்பது குறித்தும்  விவாதிக்கப்பட்டது.

முன்னதாக, லெபனான் நீதித்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர், தகவல் துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர் உள்பட அனைவரும் முறைப்படி பதவி விலகும் கடிதத்தைப் பிரதமரிடம் அளித்தனர்.

இதையடுத்து தமது அரசின் பதவி விலகல் அறிவிப்பை, நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் தோன்றி ஹஸ்ஸன் டியாப் வெளியிட்டுள்ளார்.

பெய்ரூட் துறைமுக பகுதியில் 2,750 டன் அளவிலான அம்மோனியம் நைட்ரேட் ரசாயனம், ஆறு ஆண்டுகளாக தேக்கி வைக்கப்பட்ட சம்பவத்தில், ஆளும் அரசு அலட்சியமாக இருந்தது எனவும் ஊழல் நடந்ததாகவும்  தொிவித்து  மக்கள் கடந்த ஆறு நாட்களாக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

பல இடங்களில் அரசதுறை அலுவலகங்கள் மற்றும் அமைச்சகங்களுக்குள் புகுந்த பொதுமக்கள், அவற்றின் வ சொத்துக்களை  சேதப்படுத்தினார்கள். தெ்துடன்  தலைநகர் பெய்ரூட்டில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் கடுமையாக மோதல்களும் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில், பிரதமர் ஹஸ்ஸன் டியாபின் தலைமையிலான  ஆட்சியாளா்கள் அனைவரும் ப  பதவி விலகும் அறிவிப்பு  நேற்று திங்கட்கிழமை இரவு வெளிவந்துள்ளது. #லெபனான்  #பெய்ரூட் ,#வெடிப்புசம்பவம்  #ஆட்சியாளா்கள் #எதிர்ப்புணர்வு  #பதவிவிலகல்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap