இலங்கை பிரதான செய்திகள்

செஞ்சோலை மாணவிகள் படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006ஆண்டு ஆவணி மாதம் 1 4 ம் திகதி இலங்கை வான்படையின் கிபிர் விமானங்கள் நடாத்திய மிலேச்சதனமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட செஞ்சொலை பாடசாலை மாணவர்கள் 54 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் பதின்னான்காவது ஆண்டு நினைவுநாள் இன்று நடைபெற்றது

படுகொலை இடம்பெற்ற இடைக்கட்டு செஞ்சொலை வளாகப்பகுதியில் முதலில் கொல்லப்பட்டவா்களின் உறவினா்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனா்.

அதனைத் தொடா்ந்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாணசபை முன்னால் உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் ஆகியோா் அஞ்சலி செலுத்தியுள்ளனா்.

ஆண்டு தோறும் நினைவேந்தல் இடம்பெறும் வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் அமைக்கப்பட்ட நினைவு வளைவிற்கு அருகில்  நினைவேந்தல்  நடத்த காவல்துறையினா் தடை விதித்திருந்தனர்.

தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அந்த இடத்திற்கு சென்றபோது காவல்துறையினா் தடைவிதித்துள்ள போதிலும் வழமைபோல் நிகழ்வு செய்யும் அதே இடத்தில் சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனா்.  

நினைவேந்தல் இடம்பெற்ற பகுதிகளில் ஆயுதம் தாங்கிய படையினர் காவல்துறையினா் மற்றும் அரச புலனாய்வாளர்கள் பிரசன்னமாகியிருந்ததோடு அஞ்சலி நிகழ்வினை மேற்கொள்பவர்களை புகைப்படம் எடுத்துள்ளனர் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது

வள்ளிபுனம் பிரதேசத்தில் செஞ்சோலை சிறுவர் இல்லம் இயங்கிய இடத்தில் மாணவிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டுக்கொண்டிருந்த இடத்தில் காலைப் பொழுதில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது #செஞ்சோலை #சிறுவர்இல்லம் #படுகொலை #கிபிர்

000

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.