Home இலங்கையாழில் பெண் ஒருவரின் எலும்புக்கூடு -ஆடைகள் மீட்பு

யாழில் பெண் ஒருவரின் எலும்புக்கூடு -ஆடைகள் மீட்பு

by admin

யாழ்ப்பாணம் பண்ணை ரெலிகொம்மின் பின்பக்கத்தில் உள்ள கடற்றொழில் சாலை வளாகத்திலிருந்து பெண் ஒருவரின்  எலும்புக் கூடு மற்றும் ஆடைகள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று   (14) காலை கடற்றொழில் சாலை வளாகத்தில் கூடாரம் அமைப்பதற்காக குழி தோண்டிய போது குழியில் எலும்புக் கூடுகள் மற்றும் பெண்ணின் ஆடைகள் காணப்பட்டதனையடுத்து யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து யாழ்ப்பாணம் தலைமை காவல்துறைப்பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ மற்றும் யாழ். பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன்,  யாழ். மாநகர பிரதி முதல்வர், கிராம சேவையாளர் உள்ளிட்டவர்கள் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்

அது தொடா்பில் காவல்துறையினரால் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், எலும்பு கூடு தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினா் முன்னெடுத்து வருகின்றனர். #யாழ்ப்பாணம் #பெண் #எலும்புக்கூடு #ஆடைகள் #மீட்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More