Home இலங்கைசெப்டெம்பரில் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் ஆரம்பம்..

செப்டெம்பரில் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் ஆரம்பம்..

by admin


நாட்டிற்கு பொருத்தமுள்ள அரசியலமைப்பு சீர்திருத்தம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், உத்தேச அரசியலமைப்பை செப்டெம்பர் மாதமளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்திலுள்ள பொருத்தமற்ற விடயங்களை திருத்தியமைத்து 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நீதியமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி அண்மையில் தெரிவித்திருந்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More