Home உலகம்நேபாளத்தில் நிலச்சாிவு – 18 போ்பலி

நேபாளத்தில் நிலச்சாிவு – 18 போ்பலி

by admin

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 21 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நேபாள நாட்டின் சிந்துபல்சவுக் மாவட்டத்தின் ஜுஹல் ரூரல் என்ற பகுதியில் உள்ள லிடி கிராமத்தின் மலைத்தொடர் பகுதியில் 170-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை (14) காலை 6.30 மணியளவில் குடியிருப்பு பகுதிகள் அமைந்திருந்த மலைத்தொடர் பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 37 வீடுகள் சேதமடைந்து மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் பலர் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.

இதனையடுத்து மீட்புக் குழுவினர் மேற்கொண்ட மீட்புப்பணியில் வெள்ளிக்கிழமை 11 உடல்கள் மீட்கப்பட்டன. சனிக்கிழமை 2 குழந்தைகள் உட்பட 7 போின் உடல்கள் மீட்கப்பட்டன.

மேலும் மண்ணுக்குள் சிக்கிய 21 பேரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் மீட்புக்குழுவினா் தொிவித்துள்ளனா். #நேபாளம் #நிலச்சாிவு #பலி

விபத்து நடந்த இடம் நிலச்சரிவு அதிகம் நடக்க வாய்ப்புள்ள பகுதி என்பதால் அங்கு வசிக்கும் மக்களை வேறு பகுதிக்கு மாற்ற நேபாள மறுசீரமைப்பு ஆணையகம் பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #நேபாளம் #நிலச்சாிவு #பலி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More