Home இலங்கைபிள்ளையானுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி

பிள்ளையானுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி

by admin

நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை நாளை மறுதினம் (20) நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம், இன்று (18) அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்த்தேசிய கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில், பிள்ளையான் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டு தொடர் விளக்க மறியலில் வைக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது. #நாடாளுமன்றம் #பிள்ளையான் #அனுமதி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More