2







நல்லூர் கந்த வேளின் தீர்த்தோத்ஸவம் இன்று(18) காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது.
விநாயகர், வள்ளி தேவசேனா சமேத வேற்பெருமான், சண்டிகேஸ்வரர் சண்முக புஷ்கரணிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளினர்.
திருக்குளத்தின் எட்டு திசையிலும் அஷ்ட திக்பாலகர் திருவுருவங்கள் எழுந்தருளச் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தப்பட்டன.
மத்தியில் முருகவேளின் அஸ்திர ராஜருக்கு அபிஷேக ஆராதனை நிகழ்ந்து தீர்த்தவாரி கண்டருளச்செய்யப்
பெற்றது.
நல்லூர் தேவஸ்தானத்தார் இந்நிகழ்வு பக்தர்களின் நலன் கருதி நேரலையாக ஒளிபரப்பப்பட்டமை சிறப்பம்சமாகும். #நல்லூர் #கந்தவே #தீர்த்தோத்ஸவம் #விநாயகர்







படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love