Home இலங்கைகொட்டகலையில் கடைகள் உடைக்கப்பட்டு திருட்டு

கொட்டகலையில் கடைகள் உடைக்கப்பட்டு திருட்டு

by admin

(க.கிஷாந்தன்)

திம்புள்ள பத்தனை காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட கொட்டகலை வூட்டன் நகரில் அமைந்துள்ள சில்லறை கடை மற்றும் சமையல் எரிவாயு நிரப்பும் நிலையம் ஆகியவற்றில்  இன்று (20.08.2020 ) அதிகாலை இனந்தெரியாதவர்கள் கொள்ளையிட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனர்.

இத்திருட்டு சம்பவத்தின்போது சில்லறை கடையில் சிகரட், உட்பட காசு என மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும், சமையல் எரிவாயு நிரப்பும் நிலையத்தில் 70000 ரூபாய் பணமும் திருடனால் திருடப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினா் தெரிவித்தனர்.

திருடா் கடைகளில் முன்புறத்தில் உள்ள இரும்பு கதவு போன்றன உடைத்து முன் வழியாக  கடைக்குள் நுழைந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவு, நுவரெலியா மோப்ப நாய் பிரிவு உட்பட விசேட காவல்துறைகுழுக்கள் இணைந்து இத்திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினா் மேலும் தெரிவித்தனர். #கொட்டகலை #திருட்டு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More