Home இலங்கை19 ஆம் திருத்தத்தில் உள்ள சில விடயங்கள் நீக்கப்படும்.

19 ஆம் திருத்தத்தில் உள்ள சில விடயங்கள் நீக்கப்படும்.

by admin



19 ஆவது அரசியல் அமைப்பு சீர்த்திருத்தத்தில் உள்ள சில விடயங்கள் நீக்கப்படும் என தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஊவா பரணகம தேர்தல் தொகுதியில் நேற்று (22.08.20) காலை இடம்பெறற்ற பொது மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி, மகா சங்கத்தினரது கருத்துக்கள், யோசனைகளை ஏற்று, 19ஆவது அரசியல் அமைப்பு சீர்த்திருத்தத்தில் உள்ள சில விடயங்கள் நீக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் அமைப்பை சீர்த்திருத்துவதற்காகவே மக்கள் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அளித்தனர். நாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ள விடயங்கள் இல்லாமல் செய்வதற்காகவே அதில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் தொழில் அமைச்சர் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More