Home இலங்கை நெடுந்தீவு யுவதி கொலை – பிரதான சந்தேக நபா் கைது

நெடுந்தீவு யுவதி கொலை – பிரதான சந்தேக நபா் கைது

by admin

மன்னார் உப்பளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில்  கடந்த 13 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட நெடுந்தீவைச் சேர்ந்த டொறிக்கா ஜூயின் (வயது 21) என்ற இளம் யுவதியின் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபரான தாய் மாமன் நேற்றைய தினம் திங்கட்கிழமை(24) வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


மன்னாரில் இருந்து சென்ற விசேட காவல்துறைக் குழுவினர் குறித்த பிரதான சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.


குறித்த யுவதி கடந்த 11 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில்,அன்றைய தினம் இரவு மன்னார் சௌத்பார் பகுதிக்கு நடந்து சென்றுள்ளர்.
கொலை செய்யப்பட்ட யுவதி  , யுவதியின்  சகோதரி , அவரது பெரிய தாயின் மகனின் மனைவி மற்றும் தாய் மாமன் ஆகியோர் மன்னார் சௌத்பார் புகையிரத வீதியை நோக்கி நடந்து சென்றுள்ளனர்.


இந்த நிலையிலே குறித்த பகுதியில் சம்பவம் இடம் பெற்றுள்ளதோடு,குறித்த யுவதியின் சடலம் உப்பளம் பகுதியில் உள்ள பாத்தியில் வீசப்பட்டுள்ளது. -எனினும் சடலம் 13 ஆம் திகதி காலையிலே அடையாளம் காணப்பட்டுள்ளது. 


-இந்த நிலையில் குறித்த கொலை தொடர்பாக மன்னார் மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் பந்துல வீரசிங்க,உதவி காவல்துறை அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி ஆகியோரின் அறிவுறுத்தல்களுக்கு யெற்பட்ட விசேட காவல்துறை குழுவினர்
படுகொலை செய்யப்பட்ட யுவதியின் சகோதரி மற்றும் பெரிய தாயின் மகனின் மனைவி ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வைத்து கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


குறித்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான குறித்த யுவதியின் தாய் மாமனார் தலைமறைவாகி இருந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளாா்.

அவர் மன்னார் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் குறித்த பிரதான சந்தேக நபர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்டுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. #நெடுந்தீவுயுவதி #கொலை #கைது #தாய்மாமன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More