Home இலங்கையாழ்பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்களின் கவனயீர்ப்புப் போராட்டம்

யாழ்பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்களின் கவனயீர்ப்புப் போராட்டம்

by admin

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் எதிர்கொள்ளும் தேவையற்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்க வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றுக் காலப்பகுதியிலும் உயிரைத் துச்சமென மதித்துத் தாங்கள் பணியாற்றினோம். எனினும் எங்கள் மீது அபாண்டமாக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தொழில் சங்கம் ஒன்று முன்வைத்துள்ளமையைக் கண்டித்தும், நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவோரை தவிர ஏனைய அனைவரும் இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். #யாழ்பல்கலைக்கழகம் #பாதுகாப்புஊழியர்கள் #கவனயீர்ப்புப்போராட்டம் # கொரோனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More