178
“எனது அனுமதியின்றி கோப் குழுவின் தலைவர் அல்லது அதன் அங்கத்தவர்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்க முடியாது” என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
கோப் குழுவின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுணில் ஹந்துநெத்தி அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஷாநாயக்க இன்று காலை பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட போதே சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
Spread the love