Home இலங்கைஇலங்கையில் 19- 25 வயதுக்கிடைப்பட்ட இளைஞர்களுக்கு எயிட்ஸ்…

இலங்கையில் 19- 25 வயதுக்கிடைப்பட்ட இளைஞர்களுக்கு எயிட்ஸ்…

by admin

இலங்கையில் 19- 25 வயதுக்கிடைப்பட்ட இளைஞர்கள் அதிகம் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

நாடுபூராகவும் உள்ள தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு பிரிவின் நோயாளர் பார்வைப் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளுக்கமையவே, இந்த விடயம் குறித்து தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் இதுவரைன காலப்பகுதிக்குள் 3,600 பேர் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ள போதிலும் இதுவரை ,தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு பிரிவில் இதுவரை 2,000 பேர் வரை, பதிவு செய்துள்ளதாகவும், 1600 பேர் தமக்கு எயிட்ஸ் தொற்று இருப்பதாக அறியாமல் ஏனையோருடன் பழகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More