இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கு ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்கிறார் எனவும் தற்கொலையில் தமிழ்நாடு 2-வது இடத்தை பிடித்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் விபத்துகள், அதனால் ஏற்படும் மரணங்கள், தற்கொலைகள் குறித்து தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இதில் மராட்டியம் முதல் இடத்திலும், தமிழ்நாடு 2-வது இடத்திலும், மேற்கு வங்காளம் 3-வது இடத்திலும், மத்திய பிரதேசம் 4-வது இடத்திலும், கர்நாடகம் 5-வது இடத்திலும் உள்ளன.
கடந்த 2018-ம் ஆண்டு இந்தியாவில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 516 பேர் தற்கொலை செய்திருந்தனர். கடந்த ஆண்டு(2019) 1 லட்சத்து 39 ஆயிரத்து 123 பேர் தற்கொலை செய்து உள்ளனர். இதன்மூலம் தற்கொலையில் 2018-ம் ஆண்டை விட 2019-ம் ஆண்டு 3.4 சதவீதம் அதிகரித்து உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
குடும்ப பிரச்சினை, கடன் பிரச்சினை உடல்நலக்குறைவு, தொழில் பிரச்சினை, தனிமை உணர்வு, வன்கொடுமை, மனநலம் பாதிப்பு, குடிப்பழக்கத்தை கைவிட முடியாமை, நிதி நெருக்கடி உள்பட பல்வேறு பிரச்சினைகளால் அவா்கள் இவ்வாறு தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனா் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது #இந்தியா #தற்கொலை #தமிழ்நாடு