Home உலகம் ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவாின் உடலில் கொடிய விசம் கலந்துள்ளது

ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவாின் உடலில் கொடிய விசம் கலந்துள்ளது

by admin

ரஸ்ய எதிர்க் கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியின் உடலில் கொடிய விசம் கலந்துள்ளதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.

ரஸ்ய எதிர்க் கட்சி தலைவர் அலெக்ஸி நாவல்னி தொடர்ந்து ஆபத்தில் உள்ளார் எனவும் அவரது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் கொடிய விசம் அவருக்கு வழங்கப்பட்டள்ளதாகவும் ஜெர்மனி அரசு தொிவித்துள்ளது

மேலும் அந்த விசம் ரஸ்யாவிலிருந்தே உற்பத்தி செய்யப்பட்டது எனவும் அலெக்ஸி நாவல்னி மீதான இந்தத் தாக்குதலை ஜெர்மனி கடுமையாக கண்டிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஸ்ய ஜனாதிபதி புட்டினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்த அலெக்ஸி நாவல்னி ரஸ்ய ஜனாதிபதித் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தாா்.

அவருக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்ததனால் புட்டின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்திருந்தது. இருப்பினும் அலெக்ஸி நாவல்னி தொடர்ந்து பொதுவெளியில் புட்டின் அரசை விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்த நிலையில் அவா் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாம்ஸ்க் விமான நிலையத்தில் அலெக்ஸி குடித்த தேனீாில் விசம் கலந்து இருக்கலாம் என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், ரஸ்யாவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டால் புதின் அரசால் அவரது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்பதனால் அவரை ஜொ்மனியின் பெர்லினுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது #ரஸ்யா #எதிர்க் கட்சிதலைவர் #அலெக்ஸி #ஜெர்மனி #விசம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More