Home இலங்கைகம்பளையில் கேரளா கஞ்சா மீட்பு

கம்பளையில் கேரளா கஞ்சா மீட்பு

by admin

(க.கிஷாந்தன்)

கண்டி, கம்பளை காவல்துறைப்பிரிவிற்க்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று (06.09.2020 ) மாலை போதைப் பொருள் காவல்துறைப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கேரளா கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்து இருந்த 40 இற்க்கு மேற்பட்ட கேரளா கஞ்சா பக்கட்டுக்களும் மற்றும் பக்கட் செய்ய வைத்து இருந்த கேரளா கஞ்சாவையும் காவல்துறையினா் கைப்பற்றியுள்ளனர்.

காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது குறித்த நபர்கள் நீண்ட நாட்களாக இரகசியமாக கேரளா கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரளா கஞ்சா பெக்கட் ஒன்று ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததாக கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர். #கண்டி #கம்பளை #கேரளாகஞ்சா #மீட்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More