(க.கிஷாந்தன்)
இருவேறு இடங்களில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 12 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹட்டன், லெதண்டி தோட்டம் புரொடக் பிரிவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 8 பேரும், மஸ்கெலியா – சாமிமலை, ஓல்டன் கிங்கோரா தோட்டத்தில் தேயிலை மலையில் பணியில் இருந்த 4 தொழிலாளர்களும் இவ்வாறு குளவி கொட்டுக்கிலக்காகியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று ( 07.09.2020)காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன், லெதண்டி தோட்டம் புரொடக் பிரிவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 8 பேரும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏழாம் இலக்க தேயிலை மழையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மீதே மரத்திலிருந்த குளவி கூடு கலைந்து வந்து இவ்வாறு தாக்கியுள்ளது.
06 பெண்களும் 02 ஆண்களுமாக 08 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ள நிலையில் நால்வர் சிசகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதுடன் நால்வர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இருவர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்,
இதேவேளை, மஸ்கெலியா – சாமிமலை, ஓல்டன் கிங்கோரா தோட்டத்தில் தேயிலை மலையில் பணியில் இருந்த 4 தொழிலாளர்களும் குளவி கொட்டுக்கு இலக்காகி மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் சிசகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதுடன், மூவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். #தொழிலாளர்கள் #குளவிகள் #சிகிச்சை #ஹட்டன்