Home இலங்கைஇலங்கை வரும் அனைவரும் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்

இலங்கை வரும் அனைவரும் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்

by admin

எந்தவொரு காரணத்துக்காகவும் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் எந்தவொரு பிரதிநிதியும் இருவார கால கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வருவதற்கு முன்னரும், வந்த பின்னரும் அவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனை தெரிவித்துள்ள தேசிய தொற்று நோய் ஆய்வு பிரிவின் பிரதம தொற்று நோய் தடுப்பு வைத்தியர் சுதத் சமரவீர கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளாா். #கொரோனா #தனிமைப்படுத்தல் #சுகாதாரஅமைச்சு #இலங்கை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More