Home இலங்கைஇரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதி விபத்து – 11 பேர் காயம்

இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதி விபத்து – 11 பேர் காயம்

by admin

(க.கிஷாந்தன்)

நோர்வூட் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளிகம பகுதியில் இன்று (15.09.2020) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் படுங்காயங்களுக்குள்ளாகிய நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், பொகவந்தலாவையிலிருந்து ஹட்டன் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக பேருந்தும் நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என விசாரணைகளை மேற்கொண்டு வரும் நோர்வூட் காவல்துறையினா் தெரிவித்தனர்.

இரு பேருந்துகளிலும் பயணித்தவர்களில் 11 பேர், காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 3 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதோடு, 8 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நோர்வூட் காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர். #பேருந்துகள் #நேருக்குநேர் #விபத்து #ஹட்டன்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More