Home இலங்கைபத்திரிக்கை விநியோகஸ்தர் மீது வாள் வெட்டு

பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது வாள் வெட்டு

by admin

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகை விநியோகப் பணியில் ஈடுபட்டிருந்தவரை வழிமறித்த கும்பல் ஒன்று, அவரை வாளால் வெட்டிவிட்டு அவர் பயணித்த மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


கோண்டாவிலைச் சேர்ந்த பாலச்சந்திரன் மதனகரன் (வயது -43) என்பவரே வாள்வெட்டுக்கு இலக்காகி தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொள்ளைக் கும்பல் ஒன்றே இவ்வாறு வாளாள் வெட்டிவிட்டு அவரது மோட்டார் சைக்கிளை அபகரித்துச் சென்றுள்ளது என்று சுன்னாகம் காவல்துறையினா் தெரிவித்தனர். #பத்திரிக்கைவிநியோகஸ்தர் #வாள்வெட்டு #வலம்புரி #மதனகரன்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More