பிரதான செய்திகள் விளையாட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்றைய முதல் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் போட்டியிவுள்ளன.

ஐ.பி.எல். போட்டியில் சென்னை, மும்பை அணிகள் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் போட்டியிட்டதில் 17-ல் மும்பையும், 11-ல் சென்னையும் வெற்றி பெற்றிருக்கின்றன.

கடந்த ஆண்டு மும்பையுடன் விளையாடிய 4 போட்டிகபளிலும் சென்னை அணி தோல்வியடைந்தது. இறுதி ப் போட்டியில் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் கிண்ணத்தினை இழந்திருந்தமையும் இதில் உள்ளடங்குகின்றது.


போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
சென்னை: ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், அம்பத்தி ராயுடு, டோனி (தலைவா்), கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, மிட்செல் சான்ட்னெர் அல்லது இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், பியுஷ் சாவ்லா, ஷர்துல் தாகூர்.


மும்பை: ரோகித் சர்மா ( தலைவா்), குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், குருணல் பாண்ட்யா, பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, ராகுல் சாஹர், மெக்லெனஹான் அல்லது பேட்டின்சன் அல்லது நாதன் கவுல்டர்-நிலே, டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

இந்திய இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது #ஐபிஎல். #கிரிக்கெட் #ஆரம்பம் #சென்னை #மும்பை

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.