Home இலங்கைபலாங்கொடையில் மாணவி படுகொலை

பலாங்கொடையில் மாணவி படுகொலை

by admin

பாலங்கொடை ஒலுகன்தோட்ட கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள வெலிஹரனாவ பகுதியில், 17 வயதான மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பலாங்கொடை காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

பலாங்கொடை இ/இந்து கல்லூரி மாணவியான  கே.லோசினி என்பவரே, இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவியை காணவில்லை என அவரது தாயாா் நேற்று (22)  தேடிய போது, வீட்டிலுள்ள கட்டிலுக்குக் கீழ்,  மாணவி சுயநினைவின்றி விழுந்து கிடந்ததனையடுத்து அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக, வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவியின் முகம் மற்றும் கழுத்தில் காயங்கள் காணப்படுவதுடன் கழுத்து நொிக்கப்பட்டதற்கான அடையாளம் காணப்படுவதாகவும் காவல்துறையினாின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் மாணவி துஸ்பிரயோகத்துக்குட்டப்டுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். #பலாங்கொடை #மாணவி #படுகொலை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More