நடிகரும் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்றிரவு சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வழக்கமான பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனை சென்றபோதே இவ்வாறு கொரோனா அறிகுறி தென்பட்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விஜயகாந்திற்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் அவரது உடல்நிலை சீராக உள்ளது எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது #தேமுதிக #விஜயகாந்த் #கொரோனா

