ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) கட்சியின் செயலாளர் நாயகம் ராஜநாதன் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம்பெண்களை ஏமாற்றிவருதாக மனைவி என தெரிவித்து இளம்பெண் ஒருவர் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார்.
உயிர் அச்சுறுத்தல் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் தஞ்சமடைந்த 35 வயதுடைய சர்மிலா குணரட்னம் என்ற பெண் இன்று(26.09.20) செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்,
“கடந்த 2010 ஆண்டு காலப்பகுதியில் ஈழவர் ஜனநாயக முன்னணி தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம் என்ற ரீதியில் ராஜநாதன் பிரபாகரன் என்னை சந்தித்து தேர்தலில் நிற்குமாறு கேட்டிருந்தார்.இதற்கமைய நானும் உடன்பட்டு தேர்தல் செயற்பாட்டில் ஈடுபட்டேன். இதனைத் தொடர்ந்து அவருடன் 18 வயது வித்தியசாமுள்ள என்னை திருமணம் முடிக்குமாறு வற்புறுத்தினார். 1966.01.14 அன்று பிறந்த இவர் எப்படி என்னை திருமணம் செய்யலாம் என நான் விவாதம் செய்திருந்தேன்.ஆனால் என்னை பலவந்தமாக அழைத்தச்சென்று முதலாவது திருமணத்தினை மறைத்து மற்றுமொரு பதிவுத்திருமணம் ஒன்றினை செய்தார்.இதற்கமைய 2010.01.20 அன்று பதிவுத்திருமணம் நடைபெற்றது.
1984.08.29 அன்று பிறந்த மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த என்னை திருமணம் செய்த நிலையில் 2011.04.22 அன்று யெலின் அக்சயா என்ற பெண் குழந்தை எமக்கு பிறந்தது. இதன் பின்னர் தான் என்னை அவர் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தார். இதனால் அவரை விட்டு நீங்குவதற்காக விவாகரத்து கோரி விண்ணப்பித்த நிலையில் மாதம் மாதம் 15 ஆயிரம் ரூபா தாபரிப்புபணம் அவரால் எனக்கு செலுத்தப்பட்டது. ஆனால் தற்போது குறித்த தாபரிப்பு பணம் சீராக கிடைப்பதில்லை.அதனை கேட்பதற்காக எனது மகளை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்கின்ற போது கொழும்பில் இருந்து ஆட்களை அனுப்பி உனது தாயை கொல்வேன் என மகளிடம் கூறி இருக்கின்றார்.
இது தவிர எனது 9 வயதுடைய மகள் கல்வி கற்கின்ற மட்டக்களப்பு சென் ஜோசப் வாஸ் வித்தியாலயத்திற்கு சென்று மகளை சந்தித்து தாயை தான் கொல்லப்போவதாகவும் தன்னுடன் வந்துவிடுமாறும் கூறி வருகின்றார்.” இந்த விடயத்தை செய்தியாளர் சந்திப்பில் குறித்த இளம் பெண்ணுடன் பிரசன்னமாகியிருந்த மகளும் உறுதிப்படுத்தினார்.
தனது தாயை அடித்து துன்புறுத்துவதாகவும் தனக்கு முன்னால் சப்பாத்து காலால் உதைத்து கொலை அச்சுறுத்தல் விடுப்பதாகவும் இதனால் தாயும் நானும் நிம்மதி இல்லாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்)கட்சியின் செயலாளர் நாயகம் ராஜநாதன் பிரபாகரன் தமிழ் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு எதிர்கால அரசியல் நடவடிக்கையில் ஈடுபட போவதாக கூறி இளைஞர் யுவதிகளை மாயவலையில் வீழ்த்தவதுடன் பண வசூலிப்புகளையும், பாலியல் துன்புறுத்தல்களை தேமற்கொள்வதாக மற்றுமொரு குற்றச்சாட்டினை முன்வைத்த குறித்த இளஞ்யுவதி தன்னை போன்ற பெண்களை மயக்கி திருமண ஆசை கூறி பணத்தை கொள்ளையடித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்வது போன்று நடிக்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சியின் மறுசீரமைப்பு விடயத்தில் அக்கறை காட்டாது ஈரோஸ் அமைப்பின் பெயரால் பல மோசடியில் ஈடுபட்டுள்ளார்.இம்மோசடிகள் இயக்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் முயற்சிகள் நடைபெறுகின்றன. எனவே தமிழ்பேசும் மக்கள் இவ்விடயத்தில் மோசடிக்காரரான இவர் போன்றவர்களுக்கு இடமளிக்கமாலும் அவரிடம் ஏமாந்துபோகாமலும் இருக்கவேண்டும்.அத்துடன் பணமோசடி பெண்களுடன் தகாத உறவு வைத்திருத்தல் போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டுள்ள இவர் போன்றவர்களை அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும் என மன்றாட்டமாக கேட்டுக்கொண்டார்.