Home இந்தியாஇந்தியாவில் கொரோனா உயிாிழப்பு 95,542 ஆக உயா்வு

இந்தியாவில் கொரோனா உயிாிழப்பு 95,542 ஆக உயா்வு

by admin

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை 95,542 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், தற்போது குறையத் தொடங்கி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவகின்றது

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்தது. மொத்த பாதிப்பு 60,74,703 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 82,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,039 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95,542 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,01,6521 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 74893 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,62,640 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.57 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 82.58 சதவீதமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது #இந்தியா #கொரோனா #உயிாிழப்பு #பரிசோதனை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More