Home இந்தியாபாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீா்ப்பு இன்று

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீா்ப்பு இன்று

by admin

பார் மசூதி இடிப்பு வழக்கின் தீா்ப்பு இன்று வழங்கப்படுவதையொட்டி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் திகதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டி சி.பி.ஐ. காவல்துறையினா் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இதில் 17 பேர் இறந்து விட்டதால், மீதி 32 பேர் மீது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது.

இந்த தீர்ப்பையொட்டி நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கருதி, அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது #பார்மசூதி #இடிப்பு #தீா்ப்பு #பாஜக


Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More