பிரதான செய்திகள் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் -ஜோகோவிச் – ஜெலினா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பாாிசில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்றையதினம் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றுப் போட்டி ஒன்றில் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் லிதுவேனியா வீரர் ரிகார்டஸ் பெரான்கிசை வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்.

மற்றொரு போட்டியில் பல்கேரியா வீரர் டிமிட்ரோவ் 6-4, 7-6 (7-5), 6-1 என்ற நேர்செட்டில் ஆந்த்ரே மார்டினை (சுலோவக்கியா) வென்றுள்ளாா்.

அதேவேளை பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று போட்டி ஒன்றில் 2017-ம் ஆண்டு சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றிய ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா), கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) 6-4, 6-2 என்ற நேர்செட்டில் வென்று பி 3-வது சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.

மற்றொரு போட்டியில் கிவிடோவா (செக்குடியரசு) 6-3, 6-3 என்ற நேர்செட்டில் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினியை தோற்கடித்துள்ளார்.

அதேவேளை அமெரிக்க முன்னணி வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் தோல்வி கண்டு 2-வது சுற்றுடன் நவெளியேறியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது #பிரெஞ்ச்ஓபன்டென்னிஸ் #ஜோகோவிச் #ஜெலினா

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.