Home இலங்கைஹெரோயினை சூட்சுமமாக கடத்திய இளைஞன் கைது

ஹெரோயினை சூட்சுமமாக கடத்திய இளைஞன் கைது

by admin

அம்பாறை மாவட்டம் கல்முனை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட கடற்கரைபள்ளி வீதியில் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் நடமாடிய 29 வயதுடைய இளைஞனை சனிக்கிழமை(3) இரவு வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் சோதனை செய்தனர்.

இதன் போது குறித்த இளைஞன் வருகை தந்த மோட்டார் சைக்கிளின் ஆசனத்தின் கீழ் தீப்பெட்டி ஒன்றில் மறைத்து சிறு பொதி செய்யப்பட்ட ஹெரோயின் பக்கெற்றுக்கள் மீட்கப்பட்டதுடன் விசாரணையை முன்னெடுத்த பின்னர் குறித்த இளைஞனின் வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.

கல்முனை-2 கடற்கரைப்பள்ளி வீதியை சேரந்த 29 வயதுடைய குறித்த இளைஞனினிடம் இருந்து 10 மில்லிகிராம் மற்றும் மாவா தூள் 30 கிராம் என்பன கைப்பற்றப்பட்டு கல்முனை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கைதான சந்தேக நபரை கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனர். #ஹெரோயின் #இளைஞன்  #கைது #இராணுவத்தினர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More