Home இலங்கைகொரொனோ பாதித்த பெண் பருத்தித்துறை பேருந்திலும் பயணம்

கொரொனோ பாதித்த பெண் பருத்தித்துறை பேருந்திலும் பயணம்

by admin

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி, நடத்துனர் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

அத்துடன், பருத்தித்துறை பேருந்தில் பயணித்தவர்கள் சமூகப்பொறுப்புடன் தம்மையும் சமூகத்தையும் காக்க முன்வந்து இனங்காட்டுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதித்த புங்குடுதீவுப் பெண் கொழும்பிலிருந்து பயணித்த பேருந்து, புத்தளம் பகுதியில் பழுதடைந்துள்ளது. அதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 புத்தளம் பகுதியிலிருந்து அந்தப் பெண் பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்துள்ளார். அவர் கொடிகாமத்தில் காலை 4.30 இறங்கிவிடப்பட்டுள்ளர். பின்னர் வேறொரு பேருந்தில் அந்தப் பெண் யாழ்ப்பாணம் நகருக்கு பயணித்துள்ளார்.

கொழும்பு பருத்தித்துறை சேவையில் ஈடுபட்ட பேருந்தில் பணியாற்றிய நடத்துனர் மற்றும் நடத்துனர் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இனங்காணப்பட்டு சுயதனிமைப்படுதலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே அந்த பேருந்தில் பயணித்தோர் உடன் தன்னார்வமாக உங்களை வெளிப்டுத்தி வடமாகாண சுகாதார திணைக்களத்தின் 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். #பேருந்து #மினுவாங்கொட #புங்குடுதீவு #கொரோனா #சாரதி #தனிமைப்படுத்தல்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More