Home இலங்கைஇந்திய எல்லைவரை சென்றுள்ளதாக சந்தேகம் – மீனவா் தனிமைப்படுத்தலில்

இந்திய எல்லைவரை சென்றுள்ளதாக சந்தேகம் – மீனவா் தனிமைப்படுத்தலில்

by admin

இந்தியாவின் எல்லை வரை சென்றுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் மீனவா் ஒருவா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா்.

பலாலி வடக்கிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை (06) மீன்பிடிக்கச் சென்ற ஒருவர், பல மணி நேரத்தின் பின்னா் கரை திரும்பிய காரணத்தில் அவா் இந்தியாவின் எல்லை வரை சென்றிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் அவரை தனிமைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்துள்ளனர்.

நேற்று (07) மாலையே அவா் கரை திரும்பியுள்ளதாகத் தெரிவித்த காவல்துறையினா் , சட்டவிரோத செயற்பாடொன்றை மேற்கொள்வதற்காக சென்றிருக்கலாமெனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் எரிபொருள் தீர்ந்தமையினாலேயே தான் கரை திரும்புவதில் தாமதம் ஏற்பட்டதாக மீனவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #இந்தியஎல்லை #சந்தேகம் #மீனவா் #தனிமைப்படுத்தல்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More