Home சினிமா நடிக்க வேண்டாம் என விஜய் சேதுபதியிடம் கோாிக்கை

நடிக்க வேண்டாம் என விஜய் சேதுபதியிடம் கோாிக்கை

by admin

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என பிரபல இயக்குனர் சீனு ராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதியின் நடிப்பில் தற்போது ‘லாபம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அடுத்து பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளாா்.

அதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையிலேயே இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் விஜய் சேதுபதியிடம் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளார்.

அதில், விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள். விஜய்சேதுபதி நடிக்கும் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா.. நமக்கெதற்கு மாத்தையா?.. மாற்றய்யா? என சீனுராமசாமி கூறியுள்ளார்.


கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைக் கதையில் நடிக்க வேண்டாம் என்பதற்காக இவ்வாறு சீனுராமசாமி பதிவு செய்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது #விஜய்சேதுபதி #சீனுராமசாமி #வேண்டுகோள்

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More