318
யாழ். கோண்டாவில் கிழக்கு – அரசடி பகுதி வீடு ஒன்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று (16.10.20) இரவு 8.30 மணி அளவில் இரு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டு குழு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
தாக்குதலில் வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும், வீட்டின் கதவு, ஐன்னல்களும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love