Home இலங்கைநிமலராஜனின் 20வது நினைவு தினம்

நிமலராஜனின் 20வது நினைவு தினம்

by admin

யாழில் படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனின் 20ஆவது ஆண்டு  நினைவு தினம் இன்று (19) அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ்.ஊடக அமையத்தில் மதியம் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிமலராஜனின் திருவுருவ படத்திற்கு அவரது சகோதரன் சுடரேற்றினார் ,அதனை தொடர்ந்து யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மலர்மாலை அணிவித்தார், அதனையடுத்து வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் ச.சஜீவன் ,  ஊடகவியலாளர்கள், மலரஞ்சலி செலுத்தினார்கள்.


போர் சூழலில் யாழில் இருந்து , துணிவாக ஊடகப்பணி யாற்றியவர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்கள். இவர் பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை , வீரகேசரி , ராவய போன்றவற்றில் பணியாற்றி இருந்தார். 

அந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை இவரது வீட்டுக்குள் புகுந்த ஆயுத தாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அதன் போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார். 

கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர் , வீட்டின் மீது கைக் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர்.  அதன் போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம் , தாய் லில்லி மயில்வாகனம்  மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்து இருந்தனர். 

குறித்த படுகொலை சம்பவம் நடைபெற்று 20 வருடங்கள் கடந்த நிலையிலும் இதுவரை விசாரணைகள் எதுவும் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது #நிமலராஜன் #படுகொலை #நினைவேந்தல் #ஊரடங்கு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More