Home இலங்கைபிள்ளையான் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ள ஆட்சேபனை

பிள்ளையான் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ள ஆட்சேபனை

by admin

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ள ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரால் பிள்ளையானுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடா்பில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை இன்று நீதிபதி D.S.சூசைதாஸ் முன்னிலையில் இடம்பெற்ற போதே வழக்கு தொடுநர் சார்பில் முன்னிலையாகிய அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரனினால் இவ்வாறு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர் என்ற வகையிலேயே பிள்ளையானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தொிவித்த அரச சட்டத்தரணி அதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கும் தொடர்பில்லை எனவும் மன்றில் குறிப்பிட்டுள்ளாா்.

இணைத்தலைவர் என்ற வகையில் நிர்வாக செயற்பாடுகளுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் அதற்கு தான் ஆட்சேபனை தெரிவிப்பதாகவும் தொிவித்த அரச சட்டத்தரணி இதனூடாக பிள்ளையானின் நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விளக்கமறியல் கைதியாக உள்ள ஒருவருக்கு முதற்தடவை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், தொடர்ந்தும் அனுமதி வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும் எனவும் எதிர்காலத்தில் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் விளக்கமறியல் கைதியான பிள்ளையான் சுதந்திரமாக நடமாடுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும் எனவும் அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடயங்களை ஆராய்ந்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி, இந்த மனு தொடர்பான உத்தரவு எதிர்வரும் 26 ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என தொிவித்துள்ளாா். #பிள்ளையான் #ஒருங்கிணைப்புக்குழுகூட்டம் #ஆட்சேபனை #விளக்கமறியல்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More