Home இலங்கைதிருக்கடலூர் மக்கள் தமது கிராமத்தை தனிமைப்படுத்தினர்…

திருக்கடலூர் மக்கள் தமது கிராமத்தை தனிமைப்படுத்தினர்…

by admin

திருகோணமலை – திருக்கடலூர் கிராம மக்கள் தமது கிராமத்தை தாமாக தனிமைப்படுத்தியுள்ளனர்.

திருக்கடலூர் கிராமத்தில் சுமார் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்ட இந்த கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமது கிராமத்தை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

குறித்த கிராமத்திற்குள் செல்வதற்கான ஆறு வீதிகளையும் மூடியுள்ள இவர்கள், வெளி நபர்களை தமது ஊருக்கு வர வேண்டாம் எனும் பதாதைகளையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.

திருக்கடலூர் கிராமத்தில் எவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகாத நிலையில், முன்னெச்சரிக்கையாக இந்த சுய தனிமைப்படுத்தல் செயற்பட்டை இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சுய தனிமைப்படுத்தலினால் பொருளாதார சவால்களை எதிர்நோக்கியுள்ள போதிலும், தமது கிராமத்தவர்களின் நன்மை கருதி இத்தகைய கடினமான முடிவை எடுத்ததாக மக்கள் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More