Home இலங்கையாழில் மேலும் மூவருக்கு கொரோனா

யாழில் மேலும் மூவருக்கு கொரோனா

by admin

யாழ்ப்பாணம், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று  (வியாழக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் சிறுவனும் உள்ளடங்குவதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் கொழும்பு, பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று வந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருபவரின் உறவினர்கள் மூவரே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரும் ஒரு வாரத்துக்கு மேலாக சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டிருந்தார்கள்.

அவர்களிடம் நேற்று முன்தினம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பரிசோதனை கூடத்தில் நேற்று  இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. #யாழ்ப்பாணம் #கரவெட்டி #சுகாதார #கொரோனா #சத்தியமூர்த்தி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More