Home இலங்கை கொரோனாவும் – இலங்கையும்…

கொரோனாவும் – இலங்கையும்…

by admin

கொழும்பில் 2000ற்கு மேற்பட்டோருக்கு கொரோனா…

கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பிரதேச செயலாளர் பிரதீப் யசரட்ன இன்று தெரிவித்தார்.

இதேபோன்று தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் மேல் என தெரிவிக்கப்பட்டது இதற்கமைவாக கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் மேல் என குறிப்பிடப்பிட்டுள்ளார்.

COVID-19 வைரஸ் தொற்றின் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நிதி வழங்கப்பட்டுள்ளது. தொற்றினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இரண்டு வார காலத்திற்கு நிவாரணத்தை வழங்குவதற்காகவே இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலாக பிரதமர் அலுவலகத்தின் மூலம் சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதற்கமைவாக அனைத்து குடும்பங்களுக்கும் இந்த நிவாரண உதவியை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொள்ளாது ஒரு குடும்பத்திற்கு இரண்டு வாரங்களுக்கு தேவையான அத்தியாவசிய உலர் உணவுப்பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களை அடையாளம் கண்டு உலர் உணவுப்பொருட்களை வழங்குமாறு 13 பிரதேச செயலாளர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் அதாவது இரண்டு வாரங்களுக்கு போதுமான ரூபா 10,000/= பெறுமதியான பொருட்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

சில சந்தர்ப்பத்தில் ஒரு வீட்டில் இரண்டு குடும்பங்களுக்கு மேல் வசிப்பார்களாயின் கிராம உத்தியோகத்தவர் மூலம் அது தொடர்பாக உறுதிப்படுத்தப்படவேண்டும் அவர்களுக்கு தனித்தனியாக உணவு பொருள் பொதி வழங்கப்படும்.

சுகாதார அதிகாரி அல்லது இந்த தனிமைப்படுத்தல் குடும்பங்களின் நலன்களைப் பேணுவதற்காக ஒவ்வொரு காவல் துறைப் பிரிவிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அடிக்கடி வீடுகளுக்கு அருகில் காணப்படுவார். அவருடன் தொடர்பு கொண்டு இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிக்கு இதுதொடர்பான தகவலை வழங்கினால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் இடத்திற்கே வந்து தகவல்களைப் பெற்றுக் கொள்வார். அப்படியும் இல்லாதபட்சத்தில் இதற்கென உள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கொழும்பு பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு உங்களது உலர் உணவுப் பொதியை பெற்றுக் கொள்ள முடியும்.

அதற்கான தொலைபேசி இலக்கம் வருமாறு 011 236 9139 பிரதேச செயலாளர் இது தொடர்பாக அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வார்என்று கொழும்பு மாவட்ட பிரதேச செயலாளர் பிரதீப் யசரட்ன மேலும் தெரிவித்தார்.

வத்தளையில் 115க்கு கொரோனா

வத்தளையில் உள்ள விளையாட்டுத் தொழிற்சாலையில் 115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.

ராகம காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு (ஓஐசி) கொரோனா…

ராகம காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு (ஓஐசி) கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதியாகி உள்ளது.

நேற்றைய தினம் (05.11.20) 383 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்றைய தினம் (05.11.20) 383 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்படையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 92 ஆக உயர்வடைந்துள்ளது.

அதனையடுத்து, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 570 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 918 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், கொவிட்-19 தொற்றிலிருந்து 765 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து நாளொன்றில் அதிகளவானோர் குணமடைந்த நாளாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

இந்த எண்ணிக்கையுடன், வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 623 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிக மரணங்கள் நேற்று(05) பதிவாகின.

நேற்றைய நாளில் 5 மரணங்கள் பதிவாகியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணரத்னவை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையுடன், நாட்டில் இதுவரையில், கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மரணித்த 5 பேரில், மூன்று பேர் வீடுகளிலேயே மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More