Home இலங்கைபிள்ளையானின் செயலாளா் பிரசாந்தன் கைது

பிள்ளையானின் செயலாளா் பிரசாந்தன் கைது

by admin

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசது​றை சந்திரகாந்தனின் செயலாளர் பூ.பிரசாந்தன் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றுக்காலை ஆரயம்பதியிலுள்ள அவரது வீட்டிலிருந்து மட்டக்களப்பு வாவி கரையிலுள்ள அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்த போது கொழும்பிலிருந்து சென்றிருந்த குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் அவா் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஆரயம்பதியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவா் பின்னா் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் போிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். #பிள்ளையான் #செயலாளா் #பிரசாந்தன் #கைது #குற்றப்புலனாய்வுபிரிவு #ஆரயம்பதி #இரட்டைப்படுகொலை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More