போகம்பறை சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிலர் கூரையில் ஏறி எதிர்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறைச்சாலையிலுள்ள அனைத்து கைதிகளுக்கும் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியே இவ்வாறு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுத்ஹதுள்ளனா்.
அங்கு சுமார் 800 கைதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவா்களில் 30 கைதிகளுக்கும் மற்றும் இரண்டு அதிகாரிளுக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலைமையில் தமக்கும் கொரோனா தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதால் தமக்கு விரைவில் பிசிஆர் பரிசோதனை செய்யுமாறும் இல்லையெனில் வேறு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரியுமே இவ்வாறு அவா்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #போகம்பறைசிறைச்சாலை #கைதிகள் #ஆா்ப்பாட்டம் #பிசிஆர் #கொரோனா