Home உலகம்8 குழந்தைகள் கொலை – 10 குழந்தைகளை கொல்ல முயற்சி – தாதி கைது

8 குழந்தைகள் கொலை – 10 குழந்தைகளை கொல்ல முயற்சி – தாதி கைது

by admin

இங்கிலாந்தின் செஷயர் பகுதியில் உள்ள செஸ்டர் மருத்துவமனையில் 8 குழந்தைகளை கொலை செய்ததுடன் 10 குழந்தைகளை கொல்ல முயன்றது தொடர்பாக தாதி ஒருவரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

குறித்த மருத்துவமனையில் தாதியாக கடமையாற்றிய 30 வயதான லூசி லெட்பை என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாா்.

கடந்த 2015 யூன் முதல் 2016 யூன் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 15 பச்சிளம் குழந்தைகளின் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் சந்தேகத்தின் பேரில் கடந்த 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட லூசி பின்னர் ல் பிணையில் வெளியில் வந்திருந்தாா்

இந்தநிலையில் 2019-ம் ஆண்டு யூன் மாதம் 8 குழந்தைகளை கொலை செய்தது மற்றும் 10 குழந்தைகளை கொல்ல முயன்றது தொடர்பாக லூசியை மீண்டும் கைது செய்துள்ள காவல்துறையினாினால் அவா்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. #இங்கிலாந்து #செஸ்டர்மருத்துவமனை #குழந்தைகள் #தாதி #கைது #LucyLetby #Nurse

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More