Home இலங்கைகுடும்பப்பகை – சுழிபுரத்தில் இருவர் படுகொலை

குடும்பப்பகை – சுழிபுரத்தில் இருவர் படுகொலை

by admin

யாழில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக உருவெடுத்ததில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 


சுழிபுரம் மத்தி குடாக்கனை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த  சின்னவன் செல்வம் (வயது-56) மற்றும் இராசன் தேவராசா (வயது-31) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். 
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 


இரு குடும்பங்களுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த முரண்பாடு நேற்றைய தினமும் ஏற்பட்டுள்ளது. மாலை இரு குடும்பங்களுக்கும் இடையில் கடும் வாய் தர்க்கம் ஏற்பட்டு , கைக்கலப்பாக மாறும் சூழ் காணப்பட்ட போது அயலவர்களால் இரு தரப்பினரும் சமாதானப்படுத்தப்பட்டனர்.


பின்னர் பின்னிரவு நேரம் ஒரு தரப்பினர் மற்றைய தரப்பினரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து வீட்டிலிருந்தவர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். 
அதில்  சின்னவன் செல்வம் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார், மற்றையவரான இராசன் தேவராசா (வயது-31) சிகிச்சைக்காக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். 


குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  #சுழிபுரம் #குடும்பப்பகை #படுகொலை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More