Home இலங்கைஇறைச்சிக்கடையில் கத்திக்குத்து

இறைச்சிக்கடையில் கத்திக்குத்து

by admin

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில், மாட்டு இறைச்சிக் கடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தில் இறைச்சி வாங்கச் சென்றவருக்கு கடைக்காரர் கத்தியால் குத்தியதால் அவர் படுகாயமடைந்துள்ளார். 


இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 
இச்சம்பவத்தில் கோப்பாயை சேர்ந்த 40 வயதான ஒருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இறைச்சி வாங்க சென்றவர் பசு மாடு போல இருக்கு என கூறியதால் கோபமடைந்த நிலையில் இருவரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் கடைக்காரர் கத்தியால் தாக்கி குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை குறித்த நபர் மதுபோதையில் இறைச்சிவாங்க கடைக்கு வந்ததாகவும் தன்னை தாக்கியதாகவும், அதனால் தான் திருப்பி தாக்கியதாகவும் கடைக்காரர் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார். 


கடைக்காரரை கைது செய்தகாவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். #இறைச்சிக்கடை #கத்திக்குத்து #கோப்பாய்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More