Home இலங்கையாழில் சீரற்ற காலநிலை – 22 குடும்பங்கள் பாதிப்பு!

யாழில் சீரற்ற காலநிலை – 22 குடும்பங்கள் பாதிப்பு!

by admin

கடந்த 24 மணித்தியாலங்களில் யாழ் மாவட்டத்தில் காணப்பட்ட காற்றுடன் கூடிய மழை தாக்கத்தின் காரணமாக 22 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார்.

கடந்த 15 ஆம் திகதியிலிருந்து இன்றைய தினம் வரை யாழ்ப்பாண மாவட்டத்தில்  காணப்பட்ட  காற்றுடன் கூடிய மழையின் தாக்கத்தின் காரணமாக 22குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 16  வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும்

நல்லூர், கோப்பாய் தெல்லிப்பளை, பருத்தித்துறை, சண்டிலிப்பாய்,கரவெட்டி ,பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அனர்த்தத்தினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  பாதிப்புகள் தொடர்பான  விவரங்கள் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ் மாவட்டஅனர்த்தமுகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார் #யாழில் #சீரற்றகாலநிலை #குடும்பங்கள் #பாதிப்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More