
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் அருகே நேற்றிரவு பாரவூா்தி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேகமாக சென்று மோதியதால், காரின் முன்பகுதி கடுமையாக சிதைந்து பாரவூா்தியில் சிக்கிக்கொண்டதாகவும் தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினா் மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காஸ் கட்டர் உதவியுடன் காரின் பாகங்கள் வெட்டப்பட்டு உள்ளே இருந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் இந்த விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனா் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது #உத்தரபிரதேசம் #வீதிவிபத்து #குழந்தைகள் #பாரவூா்தி
Spread the love
Add Comment