Home இலங்கைமாவீரர் நாளுக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி

மாவீரர் நாளுக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி

by admin

மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக்கக் கூடாது என கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தலையீட்டு நீதிப் பேராணை மனு யாழ். மேல் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக் கூடாது என்று வடக்கு மாகாண மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  

 குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 

அதன் போது , மனு தாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் , சட்டத்தரணிகளான வி.மணிவண்ணன், தி. அருச்சுனா , வி.திருக்குமரன் , செல்வி த.துளசி, திருமதி. க.திருக்குமரன்  மற்றும் கே.சஜந்தன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகினர். 


எதிர்மனுதாரர்களாக வடக்கு மாகாண மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் பி.பி.எஸ்.எம். தர்மரட்ண, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண காவல்நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்
பிரதிவாதிகள் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து முன்னிலையாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  #மாவீரர்நாள் #அனுமதி #தள்ளுபடி #பயங்கரவாததடைச்சட்டம் #தனிமைப்படுத்தல் 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More