இலங்கை பிரதான செய்திகள்

சுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு …

யாழ்ப்பாணம் சுழிபுரம் சவுக்கடி மீன் பிடி துறைமுகத்திற்கு செல்லும் பாதைக்கு அருகில் இருந்து இரு குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

விவசாய நடவடிக்கைக்காக காணியை துப்பரவு செய்யும் போது குண்டுகள் வெளிப்பட்டதை அடுத்து அது தொடர்பில் மக்களால் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டது.

கடற்படையினர் காவற்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பொலிசார் அவ்விடத்திற்கு வந்ததை அடுத்து இரு குண்டுகளும் மீட்கப்பட்டன.

குறித்த காணி உள்ளிட்ட பகுதியில் கடந்த காலங்களில் கடற்படையினரின் முகாம் அமைந்திருந்தது எனவும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே மக்களிடம் அப்பகுதி கையளிக்கப்பட்டது.

அதனை அடுத்து அப்பகுதியினர் விவசாய நடவடிக்கை மற்றும் கால் நடைகளின் மேய்ச்சல் நிலமாக அப்பகுதியினை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையிலையே அப்பகுதியில் இருந்து குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

#யாழ்ப்பாணம் #சுழிபுரம் #சவுக்கடி #மீன்பிடிதுறைமுகம்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap